/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாராபுரம் யூனியனில்640 பேர் மனுத்தாக்கல்தாராபுரம் யூனியனில்640 பேர் மனுத்தாக்கல்
தாராபுரம் யூனியனில்640 பேர் மனுத்தாக்கல்
தாராபுரம் யூனியனில்640 பேர் மனுத்தாக்கல்
தாராபுரம் யூனியனில்640 பேர் மனுத்தாக்கல்
ADDED : செப் 30, 2011 01:57 AM
தாராபுரம்: தாராபுரம் பஞ்சாயத்து யூனியனில் 640 பேர் வேட்பு மனு தாக்கல்
செய்தனர்.தாராபுரம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 16 கிராம பஞ்சாயத்து
தலைவர் பதவிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - சுயேச்சைகள் உட்பட 90 பேரும்,
12 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 72 பேரும், 141 கிராம பஞ்சாயத்து வார்டு
கவுன்சிலர் பதவிக்கு 471 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஏழு
பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்த
வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்களை லாரி, டெம்போ, மினி டோர் உட்பட பல்வேறு
வாகனங்களில், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
உடுமலை
ரோடு, பார்க் ரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபங்களில் தொண்டர்களுக்கு
சுடச்சுட மதிய உணவு வழங்கினர். தாலுகா அலுவலகம் ரோடு, சர்ச் ரோடு
ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அவர்களது வாகனங்களும் நின்றதால்
போக்குவரத்து ஸ்தம்பித்தது.