Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஒரே நேரத்தில் 2 'டிகிரி' படிக்க யு.ஜி.சி., அனுமதி

ஒரே நேரத்தில் 2 'டிகிரி' படிக்க யு.ஜி.சி., அனுமதி

ஒரே நேரத்தில் 2 'டிகிரி' படிக்க யு.ஜி.சி., அனுமதி

ஒரே நேரத்தில் 2 'டிகிரி' படிக்க யு.ஜி.சி., அனுமதி

ADDED : ஜூன் 10, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வகையில், மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தேசிய கல்வி கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகள் படிக்க வழிவகை செய்யயப்பட்டுள்ளது. அதாவது, கலை அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு இடையிலான தடையை நீக்கும் வகையிலும், பல்துறை அறிவை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், நேரடி வகுப்பில் இரண்டு பட்டப் படிப்புகளை தொடரும் நிலையில், இரண்டு வகுப்புகளின் நேரமும் ஒன்றையொன்று சமரசம் செய்யக்கூடாது. ஒரே நேரம், ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை இணைய வழியிலும் படிக்கலாம் அல்லது இரண்டையும் நேரடியாகவும், இணைய வழியிலும் படிக்கலாம்.

இந்த அறிவிப்புக்கு முன், யு.ஜி.சி., நெறிமுறைகளை பின்பற்றாமல், இரண்டு படிப்புகளை ஒரே நேரத்தில் முடித்தவர்களுக்கும், பிஎச்.டி., பயில்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தாது.

அதேசமயம், யு.ஜி.சி., இணைப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிலும் படிப்புகளுக்கு மட்டும் தான், இந்த அங்கீகாரம் வழங்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us