/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்
நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்
நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்
நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்
ADDED : செப் 29, 2011 12:36 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., போட்டி வேட்பாளராக ராஜா, 26, என்பவர், மனுத் தாக்கல் செய்தார்.திண்டுக்கல் கே.கே.
நகரை சேர்ந்த இவர், நேற்று உதவி தேர்தல் அதிகாரி பழனியப்பனிடம், மனுத் தாக்கல் செய்தார். அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவதாகவும், இரட்டை இலை சின்னம் வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். உதவி தேர்தல் அதிகாரி கூறுகையில், ''கட்சியின் அங்கீகார கடிதம், மாவ ட்ட செயலாளர் கையெழுத்துடன் அளிக்கவில்லை. இவ்வாறு அளித்தால் தான், சின்னம் ஒதுக்க முடியும். இல்லாவிட்டால், சுயேச்சையாக தான் கருத முடியும். பரிசீலனையின் போது தான் முடிவை அறிவிப்போம்,'' என்றார்.அ.தி.மு.க., வினர் கூறுகையில், 'அவர் எங்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவரது தந்தை மட்டும் எங்கள் கட்சியில் இருந்தார்,' என்றனர்.


