/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்புநேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 18, 2011 09:30 PM
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு சி.என்.பாளையம், விலங்கல்பட்டு,
சிலம்பிநாதன்பேட்டை, குமளங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது
நிலத்தில் விளையும் நெல்லை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று
காலம் கடந்து பணம் பெற்று வந்தனர்.இதனால் நெல்லுக்கு போதிய விலை
கிடைக்காமல் வியாபாரிகள் சொல்லும் விலைக்கு விற்று வந்தனர்.இதன் காரணமாக
கடந்த ஆட்சியில் சி.என்.பாளையம் பகுதியை மையமாக வைத்து அரசு நேரடி நெல்
கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள்
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நிலத்தில் விளையும் நெல்லை
நேரடியாக விற்று வந்தனர்.தற்போது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில்,
அதிகாரிகளின் ஆசியுடன் வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவு நெல்லை
கொண்டு வந்து இங்கு விற்று வருகின்றனர்.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த
விவசாயிகளின் நெல்லை அதிகாரிகள் வாங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் திடீர் மழையால் விவசாயிகள் தங்களது நெல்லை பாதுகாக்க
முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் நெல் மூட்டைகளை இறக்குவதற்கு
அதிகக் கூலி கேட்பதாகவும் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.விவசாயிகள் நலன்
கருதி கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் தற்போது
முறைகேடு நிறைந்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி
வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.