ADDED : செப் 12, 2011 03:15 AM
சேலம்: சேலம், கீரைப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நடந்தது.சேலம் வ.உ.சி., மார்க்கெட் அருகில், கவரைத் தெருவில் அமைந்துள்ள
கீரைப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி
விக்னேஸ்வர பூஜையுடன், முதற்கால யாகபூஜை நடந்தது.
10ம் தேதி இரண்டாம் கால
யாகபூஜை, மூன்றாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு
நான்காம் கால யாகபூஜை, மண்டபார்ச்சனை, வேதிகா அர்ச்சனை நடந்தது. காலை 6.15
மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 6.35 மணிக்கு விநாயகர்
பரிவார கும்பாபிஷேகம் நடந்தது. 6.45 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்
நடந்தது. கும்பாபிஷேகத்தை கண்ணன் சிவாச்சாரியார் நடத்தி
வைத்தார்.கும்பாபிஷேக நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது.