/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள்... குவிந்தனஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள்... குவிந்தன
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள்... குவிந்தன
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள்... குவிந்தன
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள்... குவிந்தன
ADDED : செப் 11, 2011 11:04 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியினரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சி நிர்வாகிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெனிபர்சந்திரன் மனுக்களை பெற்று வருகிறார். நகராட்சி தலைவர் பதவிக்கு திண்டுக்கல்லில் போட்டியிட 21 பேரும், பழநியில் போட்டியிட 25 பேரும் விண்ணப்பித்துள்ளனர். நகராட்சி, பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிக்கு என மொத்தம் 2550 பேர் மனு செய்துள்ளனர். தே.மு.தி.க.,: கூட்டணியில், மாவட்டத்தில் ஒரு நகராட்சியையாவது பெற்றுவிடவேண்டும் என்ற ஆர்வம் மாவட்ட நிர்வாகிகளிடம் உள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் செயலாளர் ரவிக்குமாரும், மேற்கு மாவட்டத்திற்கு செயலாளர் பாலசுப்பிரமணியும் மனுக்களை பெற்று வருகின்றனர். தி.மு.க.,: திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது உள்ளாட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள், கட்சி நிர்வாகிகள் என போட்டியிட அனுமதி கேட்டு பலர் மனுக்கொடுத்து வருகின்றனர். புதுமுகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ம.தி.மு.க.,: தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா: மாநில பொதுச்செயலாளர் சரவணப்பெருமாளிடம் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனுகொடுத்தனர். மாவட்டத்தலைவர் திருமலைபாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ஆகியோர் மனுக்களை பெற்று வருகின்றனர்.