/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சிகிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சி
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சி
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சி
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 05, 2011 12:24 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி வட்டார விவசாயிகளுக்கு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து தூத்துக்குடி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கல் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் கணேசன் தொடங்கி வைத்தார். அத்திமரப்பட்டி விவசாயிகள் ஆர்வலர் குழு தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல் பிரிவு உதவி செயற் பொறியாளர் அமுதன் வரவேற்றார். இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியில் நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண்மை பொறியியல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள், திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நடவு முறை, பண்ணை கருவிகள் செயல் விளக்கம், வாழை சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள், நுண்நீர் பாசன முறைகள், உழுவை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடுகள் குறித்து பல்வேறு பேராசிரியர்கள், துறை பொறியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் விளக்கி கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி பொறியாளர்கள் முருகன், திவ்வியநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.