/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தேசிய திறனாய்வு தேர்விற்கான விண்ணப்பம் வழங்கல்தேசிய திறனாய்வு தேர்விற்கான விண்ணப்பம் வழங்கல்
தேசிய திறனாய்வு தேர்விற்கான விண்ணப்பம் வழங்கல்
தேசிய திறனாய்வு தேர்விற்கான விண்ணப்பம் வழங்கல்
தேசிய திறனாய்வு தேர்விற்கான விண்ணப்பம் வழங்கல்
ADDED : ஆக 26, 2011 12:21 AM
விழுப்புரம் : தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய வருவாய்வழி திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வு வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களில் நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 16ம் தேதி முதல் வரும் 30 வரை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில அளவில் நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வில் விண்ணப்பிக்க கடந்தாண்டு 7ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது மாநில மற்றும் மைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் இந்தாண்டு 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அதே போல் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வில் பங்கேற்க கடந்தாண்டு மாநில அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிகாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம். கடந்த கல்வியாண்டு 7ம் வகுப்பு இறுதி தேர்வில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பொதுதேர்வு என்பதால் இந்த இரு திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்போர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் இரு திட்டத்தின் கீழும் தகுதி பெற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டி மதிப்பெண்கள் பெற்றிருப்பின், அந்த மாணவரின் பெயர் இரு பட்டியலில் இருந்தால் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் மட்டுமே படிப்புதவி தொகை வழங்கப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை கடலூர் அரசு தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெறலாம். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் கட்டணமாக 50 ரூபாய் வசூலித்து மொத்தமான அனைத்து மாணவர்களின் கட்டண தொகையை கருவூலத்தில் செலுத்தி தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் துணை இயக்குனர், அரசு தேர்வுகளின் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், 9/8 ஆற்றாங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர்-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதே போல் தேசிய வருவாய் வழி தேர்வு விண்ணப்பங்களை விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரில் சமர்பிக்கலாம். தேர்வு கட்டணம் கருவூலத்தில் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு சி.இ.ஓ., குப்புசாமி தெரிவித்துள்ளார்.