108 ஆம்புலன்சில் பணியாற்ற மதுரையில் ஆக. 29ல் முகாம்
108 ஆம்புலன்சில் பணியாற்ற மதுரையில் ஆக. 29ல் முகாம்
108 ஆம்புலன்சில் பணியாற்ற மதுரையில் ஆக. 29ல் முகாம்

மதுரை : 108 ஆம்புலன்சில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆக., 29 ல் மதுரையில் நடக்கிறது.
இந்நிறுவனம் புதிய ஊழியர்கள் நியமனத்திற்காக வேலை வாய்ப்பு முகாமை ஆக., 29 ல் காலை 9.30 மணிக்கு மதுரை காமராஜர் ரோடு, செல்லம் சரஸ்வதி மகாலில் நடத்த உள்ளது. ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, 25 முதல் 32 வயதுக்குள், உயரம் 162.5 செ.மீ.,க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக ஓட்டுநர் உரிமம் (5 ஆண்டு அனுபவத்துடன்) மற்றும் கனரக ஓட்டுநர் உரிமத்தின் (குறைந்தபட்சம்) எல்.எல்.ஆர்., வைத்திருக்க வேண்டும். மாதச்சம்பளம் ரூ. 6600.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, லைப் சயின்ஸ், நர்சிங் மற்றும் மூன்றாண்டு நர்சிங் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 21 முதல் 30 வரை. சம்பளம் மாதம் ரூ. 7750. தமிழகத்தில் எந்த இடத்திலும் 12 மணிநேர 'ஷிப்டில்' பணியாற்ற தயாராக வரவேண்டும். முகாம் நாளில் தேவையான ஒரிஜினல் சான்றிதழ்களுடன் நேரடியாக வரலாம். இதுதொடர்பாக 044- 2888 8060ல் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட மேலாளர் தணிகைவேல் தெரிவித்தார்.


