Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் ஆஜராகவில்லை சன் "டிவி' சக்சேனா

திருப்பூரில் ஆஜராகவில்லை சன் "டிவி' சக்சேனா

திருப்பூரில் ஆஜராகவில்லை சன் "டிவி' சக்சேனா

திருப்பூரில் ஆஜராகவில்லை சன் "டிவி' சக்சேனா

ADDED : ஆக 25, 2011 01:34 AM


Google News
திருப்பூர் : காகித மில் அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற சன் 'டிவி' நிர்வாகி சக்சேனா, மற்ற வழக்குகளில் கைதாகி இருப்பதால், நேற்று குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகவில்லை. உடுமலையை சேர்ந்தவர் சீனிவாசன்; இவரது காகித மில்லை அபகரித்த வழக்கில், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், சன் 'டிவி' தலைமை

நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அன்பழகன் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில், சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை, நேற்று முன்தினம் உடுமலை ஜே.எம்., கோர்ட் எண் 1ல் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அய்யப்பனுக்கு ஜாமின் மறுத்தும், சக்சேனாவுக்கு மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.00 மணிக்கும், மாலை 5.00 மணிக்கும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இவர், ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஜாமின் மனுக்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், நேற்று, திருப்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us