அமைச்சரை நீக்க உ.பி.லோக்ஆயுக்தா முதல்வருக்கு சிபாரிசு
அமைச்சரை நீக்க உ.பி.லோக்ஆயுக்தா முதல்வருக்கு சிபாரிசு
அமைச்சரை நீக்க உ.பி.லோக்ஆயுக்தா முதல்வருக்கு சிபாரிசு
ADDED : ஆக 17, 2011 06:20 AM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பண மோசடி மற்றும் ஊழல்வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்யும்படி அம்மாநில லோக்ஆயுக்தா நீதிபதி ,மாயாவதி அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவரது அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அவத்பால்சிங் யாதவ். உ.பி. மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் அலிகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஏற்கனவே இவர் மீது பண மோசடி குறித்து லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் சுபோத்யாதவ் என்ற வக்கீல் லோக்ஆயுக்தாவில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் அமைச்சர் அவத்பால்சிங் யாதவ், நிலஉச்சவரம்பு சட்டத்தை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து அளவு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். பல்வேறு பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். தவிர இவர் மீது மூன்று பேர் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. ஆகவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த லோக்ஆயுக்தா நீதிபதி என்.கே. மெகரோத்ரா, அமைச்சர் அவத்பால்சிங் யாதவ் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்.இதன் மூலம் அரசுக்கு கலால் வரி மூலம் ரூ. 200 கோடி வரை இழப்பு செய்துள்ளார் என்பன உள்ளிட்ட 36 பக்க புகார் அறிக்கையினை சமர்பித்துள்ளார். மேலும் அமைச்சரவையிலிருந்து அவத்பால்சிங் யாதவை நீக்குமாறு முதல்வர் மாயாவதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.


