பஸ் மோதிபைக்கில் சென்ற வாலிபர் சாவு
பஸ் மோதிபைக்கில் சென்ற வாலிபர் சாவு
பஸ் மோதிபைக்கில் சென்ற வாலிபர் சாவு
ADDED : ஆக 13, 2011 02:52 AM
கடலூர்:தனியார் பஸ் மோதி மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர்
இறந்தார்.பண்ருட்டி அடுத்த வடுகப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்தவர் தனசேகர்.
இவரது மகன் சவுந்தர், 24; இவர் பண்ருட்டியில் இருந்து
கடலூருக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். தோட்டப்பட்டு காலனி
அருகே வரும்போது எதிரில் சென்ற தனியார் பஸ் மோட்டார் பைக் மீது
மோதியது.இதில் பலத்த காயமடைந்த சவுந்தர் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியில் இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து
வருகின்றனர்.