Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சியில் காலையிலேயே வந்து நிதான "ஷாப்பிங்' செய்யுங்கள்

வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சியில் காலையிலேயே வந்து நிதான "ஷாப்பிங்' செய்யுங்கள்

வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சியில் காலையிலேயே வந்து நிதான "ஷாப்பிங்' செய்யுங்கள்

வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சியில் காலையிலேயே வந்து நிதான "ஷாப்பிங்' செய்யுங்கள்

ADDED : ஆக 07, 2011 02:49 AM


Google News
மதுரை:'ஜில்' என்று குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட ஏராளமான அரங்குகளில், வகை வகையாக குவிக்கப்பட்டுள்ள, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் பொதுமக்களை திணற வைக்கின்றன. காலையிலேயே வந்து நிதானமாக 'ஷாப்பிங்' செய்வோர், முழு மனத்திருப்தியுடன் செல்கின்றனர். பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. நிறுவனங்கள் இங்கு அமைத்துள்ள அரங்குகளில், குறைந்த விலையில் விருப்பமான பொருட்களை வாங்கி, வாடிக்கையாளர்கள் மகிழ்கின்றனர். பல அரங்குகளில், வெளியில் கிடைக்காத அளவு தள்ளுபடியும் இலவசங்களும் கிடைப்பதால், அங்கெல்லாம் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சூப்பர் ஷாப்பிங் 'டிப்ஸ்': வீட்டிலிருந்து கிளம்பும் போதே, என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என பட்டியலிட்டு வாருங்கள். அந்த பொருட்களை வாங்கிய பிறகு, அதுவரை பார்க்காத, பிடித்த பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். தேவையான பொருட்களை வாங்கிய பிறகு, அவை பற்றிய விளக்கங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். இரு அரங்குகளிலும் 'ஏர்கண்டிஷன்' வசதி செய்யப்பட்டுள்ளதால், காலை முதலே நிதானமாக, நேரம் போவதே தெரியாமல் 'ஷாப்பிங்' செய்யலாம்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, பொருட்களை தேர்வு செய்யுங்கள். அதிலும், குறிப்பாக, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்களில் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எதை வாங்கலாம் என்று தெரிந்து கொண்டு

வாங்குங்கள். மாறும் பேஷன்: நாளுக்கு நாள் மாறிவரும் எல்.சி.டி., 3டி 'டிவி', டி.டி.எச்., கேமராவில் புதிய ரகங்கள், எலக்ட்ரிக் குக்கர், இண்டக்ஷன் அடுப்பு, விதவிதமான காஸ் ஸ்டவ்கள், தூய்மையான குடிநீருக்கான ஆர்.ஓ., பிளான்ட், சமையலறையில் சிறிய கரண்டி முதல் பெரிய பாத்திரம் வரை அத்தனையும் கவர்ச்சிகரமான விலையில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.வீட்டுக்கான 'உட்டன் புளோரிங்', சோபா, அலங்கார கட்டில்கள் மற்றும் இதர பர்னிச்சர் அயிட்டங்கள் பார்ப்போரை மெய்மறக்கச் செய்கின்றன. பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற பொருட்கள் குவிந்துள்ளன. இதனால், ஒரு நாள் விட்ட பொருட்களை மறுநாள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.டூ வீலர்கள், கார்கள், நீராவியில் அனைத்துப் பொருட்களையும் வேக வைக்கும் குக்கர், வாட்டர் ஹீட்டர், தரைவிரிப்புகள், மெத்தைகள், அலங்கார தலையணைகள், எமர்ஜென்சி விளக்குகள், மிஷின் டூல்ஸ், கொசு விரட்டிகள், கொசு வலைகள், ரஜாய் ரகங்கள், பொம்மைகள், பிளவர் வாஷ், மசாலா டீ, விதவிதமாய் அணிகலன்கள், ஐ.கியூ. 'சிடி'க்கள், பக்குவப்படுத்தப்படாத பேரீச்சை, ஆட்டோமேடிக் மசாஜர், ஹெர்பல் அழகு சாதனப் பொருட்கள், மசாலா பருப்பு வகைகள், மிக்ஸ் வகைகள், வேஷ்டிகள் சட்டைகள், ராஜஸ்தான் மார்பிள் வேலைப்பாடுகள் ஏராளமாக கிடைக்கின்றன. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைக்க தேவையான சேப்டி லாக்கர்கள், நவீன பூட்டு ரகங்கள், எலக்ட்ரானிக் பாதுகாப்புச் சாதனங்களும் குவிந்துள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்காமல் கிடைக்கும் இந்த வாய்ப்பை, பொறுமையாக கொஞ்சம் நேரம் செலவழித்து, மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு செல்லுங்கள்.

கண்காட்சியை தினமலர் நாளிதழுடன், எல்ஜி சினிமா 3டி, ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்குகின்றன. 'அசோசியேட்டட் ஸ்பான்சர்களாக' மதுரை அனிதா ஸ்டோர்ஸ், என்.ஜே.பி., (தேசிய சணல் வாரியம்), அபி இம்போர்ட்டட் பர்னிச்சர், பாஞ்சாராஸ் பேசியல் கிட், பட்டர்பிளை, ராம்ராஜ் வேட்டி சட்டைகள், காளீஸ்வரி ரீபைனரி, பான் பான் ஐஸ் கிரீம், சபோல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.தினமலர் ஷாப்பர்ஸ் கண்காட்சியில்நாக்கின் நோக்கம் நிறைவேறும்

உணவில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சுவை உண்டு. அத்தனையும் சுவைக்க வேண்டுமானால் அந்தந்த இடங்களுக்கு தேடிச் செல்ல வேண்டும். அந்த வேலையை உங்களுக்கு தராமல், ஒரே இடத்தில் புதுப்புது சுவைகளை ருசி பார்க்கும் வாய்ப்பு, தினமலர் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் கிடைத்துள்ளது.இங்குள்ள 'புட் கோர்ட்டில்' நமது பகுதிக்கே உரித்தான திண்டுக்கல் வேணு பிரியாணியை, கோலா உருண்டை, சில்லி சிக்கன், கரண்டி ஆம்லெட், தால்சாவுடன் ஒரு 'கை' பார்க்கலாம். ஆந்திர சுவை ஸ்டாலில், அம்மாநிலத்திற்குரிய வெரைட்டி சாதங்கள், 'கம கம' என வரவேற்கின்றன. கேரள சுவை ஸ்டாலில் புட்டு, கொழுக்கட்டையை ருசிக்கலாம். அப்படியே சென்றால், அருகிலேயே வட இந்திய சுவை ஸ்டாலில் பாவ் பாஜி, பேல் பூரி, பாணி பூரி, கட்லெட் வகைகளை 'உள்ளே' தள்ளலாம். மேற்கத்திய சுவையை விரும்புவோரை பீஸா, பர்கர், பிரெஞ்ச் பிரை வரவேற்கிறது. பாரம்பரியத்தை விரும்புவோர், கொள்ளு ஜூஸ், உளுந்து வடை, நாட்டுக்கோழி கறிச்சோறு, கறிவேப்பிலை சாதம் ஆகிய கிராமிய உணவுகளை 'போட்டுத் தாக்கலாம்'. இத்தனையும் சாப்பிட்ட பிறகு, வயிற்றை குளுமையாக்க வகைவகையான ஜூஸ் வகைகள், ஐஸ் கிரீம்களை இஷ்டம் போல் தேர்வு செய்து, அருந்தலாம்.ஒரு சாண் வயிற்றுக்கு தானே, எல்லாமே. அதை காயப் போடலாமா, உடனே விரையுங்கள் மதுரை தமுக்கம் மைதானத்திற்கு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us