/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு மதிப்பீடு அறிக்கை தயார்உள்ளாட்சி ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு மதிப்பீடு அறிக்கை தயார்
உள்ளாட்சி ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு மதிப்பீடு அறிக்கை தயார்
உள்ளாட்சி ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு மதிப்பீடு அறிக்கை தயார்
உள்ளாட்சி ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பு மதிப்பீடு அறிக்கை தயார்
UPDATED : ஆக 04, 2011 10:39 PM
ADDED : ஆக 04, 2011 10:25 PM
திண்டுக்கல்:உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுச்சாவடிகளில்,
அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீடு தயாரிக்க, மாவட்ட நிர்வாகங்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடத்தப்படும் என, அரசு
தெரிவித்துள்ளது. இதற்காக, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை கொண்டு ஊராட்சி, வார்டுகள்
வாரியாக பட்டியல் பிரிக்கும் பணி முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக, வரைவு
ஓட்டுச்சாவடி பட்டியலை தயாரித்து அனுப்ப, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி ஒன்றியம் வாரியாக அமைய உள்ள ஓட்டுச்சாவடிகளின் உத்தேச பட்டியல்
தாயார் செய்யப்பட்டது. ஒரு ஒன்றியத்திற்கு அதிகபட்சமாக 150 ஓட்டுச்சாவடிகள்
அமைக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதிகள்;
பாதுகாப்பான அறைகள் குறித்து அறிக்கை; பராமரிப்பு பணிகளுக்கான உத்தேச
மதிப்பீடு தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.