Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : ஆக 03, 2011 12:43 AM


Google News
பெரம்பலூர்: ரோட்டரி சங்கத்தின் 40-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பெரம்பலூரில் நடந்தது.விழாவுக்கு சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க செயலார் விவேகானந்தன் ஆண்டறிக்கை வாசித்தார்.புதிய தலைவராக ஓவிய ஆசிரியர் வெங்கடேசன், செயலாளராக பிரகாஷ், பொருளாளராக அம்பி.கிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்கத்தின் 3000-வது மாவட்டத்தின் முன்னாள் ஆளுனர் இளங்கோவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பிரகாஷ், வக்கீல் சேதுபதி ஆகியோரை புதிய உறுப்பினர்களாக, முன்னாள் துணை ஆளுனர் வரதராஜன் ரோட்டரி சங்கத்தில் இணைத்து வைத்தார். மாவட்ட துணை ஆளுனர் சண்முகம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

விழாவில் கௌதம புத்தர் காதுகேளாதோர் சிறப்புப்பள்ளிக்கு அரிசி மூட்டை, அன்பகம் மனநலம் குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மிஷின், பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பி.எட்., மாணவிகள் 2 பேருக்கு கல்வி உதவித்தொகை, முதியோருக்கு ஆடைகள், பள்ளி மாணவர்களுக்கு சீரூடைகள் உள்பட 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் மாவட்ட ஆளுனர் இளங்கோவன் வழங்கினார்.விழாவில் அரிமா சங்க சாசனத்தலைவர் ராஜாராம், சாசன செயலர் சோழா.அருணாசலம், பேராசிரியர் ரவி, புன்னகை மன்றத்தலைவர் ராஜசேகரன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன், முன்னாள் தலைவர்கள் ஜெயராமன், ரமேஷ், கார்த்திக், வக்கீல் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us