/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உதவி இயக்குனரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்புஉதவி இயக்குனரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
உதவி இயக்குனரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
உதவி இயக்குனரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
உதவி இயக்குனரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சிவகங்கை : தெருவிளக்கு பராமரிக்க போடப்பட்ட டெண்டருக்கு ஒப்புதல் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்து காங்., தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகராட்சி தலைவர் நாகராஜன் கூறுகையில்,'' நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது இயக்குனரகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க., நகர செயலாளர் ஆனந்தன் தெருவிளக்கு பராமரிக்க விடப்பட்ட டெண்டரில் தனக்கு கமிஷன் தரவேண்டும் என கான்ட்ராக்டரிடமும், நகராட்சி தலைவரிடமும் கேட்டார். தர மறுத்ததால் புகார் மனு அனுப்பியுள்ளார். புகார் மனுவின் அடிப்படையில் இயக்குனரகம் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்கிறது. நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானத்தின் மீது கவுன்சிலர் அல்லாத கட்சி சார்பு உள்ளவர் அளித்து புகாரை ஏற்று நிறுத்தி வைத்துள்ள அதிகாரியை கூட்டத்தில் கண்டித்து வெளிநடப்பு செய்தோம். தெருவிளக்கு பராமரிக்கப்படாததால் பல வார்டுகளில் விளக்குகள் எரியாமல் கிடக்கிறது,'' என்றார்.