Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆடுகள் திருடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் போலீஸ் தீவிரம்

ஆடுகள் திருடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் போலீஸ் தீவிரம்

ஆடுகள் திருடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் போலீஸ் தீவிரம்

ஆடுகள் திருடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் போலீஸ் தீவிரம்

ADDED : ஜூலை 28, 2011 09:15 PM


Google News
பல்லடம் : சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நள்ளிரவில் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பலை பிடிக்க, காமநாயக்கன்பாளையம் போலீசார் கிராமப்பகுதிகளில் இரவுநேர ரோந்தை தீவிரப்படுத்தியுள்ளனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. ஒன்றியத்தில் உள்ள பொன்னாக்கானி, போகம்பட்டி, செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, வாரப்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், வேலப்பகவுண்டன் பாளையம், வேப்பங்கொட்டைப்பாளையம் உட்பட பல இடங்

களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்ப ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதிகளில்நள்ளிரவில் ஆடுகள் திருடிச் செல்லப்படுகின்றன. இது, விவசாயிகளுக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஆடுகள் நள்ளிரவில் திருட்டு போவதை தடுக்கவும், திருட்டு கும்பலை பிடிக்கவும், காமநாயக்கன்பாளையம் போலீசார், தற்போது கிராமப்புறங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆடுகள் திருட்டு போனால், உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி, விவசாயிகளுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us