/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கிராமசபை கூட்டத்தில் அதிரடி நிலத்தை கைப்பற்ற நகராட்சிக்கு "தடா'கிராமசபை கூட்டத்தில் அதிரடி நிலத்தை கைப்பற்ற நகராட்சிக்கு "தடா'
கிராமசபை கூட்டத்தில் அதிரடி நிலத்தை கைப்பற்ற நகராட்சிக்கு "தடா'
கிராமசபை கூட்டத்தில் அதிரடி நிலத்தை கைப்பற்ற நகராட்சிக்கு "தடா'
கிராமசபை கூட்டத்தில் அதிரடி நிலத்தை கைப்பற்ற நகராட்சிக்கு "தடா'
ADDED : ஜூலை 26, 2011 12:33 AM
கும்பகோணம்: 'விளைநிலங்களை கையகப்படுத்தும் நகராட்சியை தடுக்கவேண்டும்' என்று, தேப்பெருமாநல்லூர் பஞ்சாயத்து கிராமசபை கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் நடந்தது. தலைவர் (பொ) செல்வி தலைமை வகித்தார். பற்றாளராக யூனியன் அலுவலர் ரிஷ்வானா, துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முழு சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துதல், சுகாதார வளாகம் மேம்பாடு செய்தல், மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதிய பணிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்புத்தீர்மானமாக, தேப்பெருமாநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில், கும்பகோணம் நகராட்சியால் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்கவும், பாதாள சாக்கடை திட்டத்துக்கு என்று விளைநிலங்களை கையகப்படுத்துவதை தடுப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


