ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
புதுச்சேரி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பா.ம.க., சார்பில் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில பா.ம.க., செயலாளர் அனந்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க., மற்றும் பசுமை தாயகம் சார்பில் நாளை, பசுமை தாயகம் நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ராஜிவ் மகப்பேறு மருத்துவமனையில் காலை 10 மணியவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். தொடர்ந்து, வெள்ளை சீருடையில் இருசக்கர வாகன அணிவகுப்பு, விழிப்புணர்வு பிரசார பேரணி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு புவி வெப்பம் அடைதலைத் தடுக்க மரம் வளர்க்க வேண்டும், பிளாஸ்டிக் இல்லா புதுச்சேரி, நீர்வள ஆதாரம் பெருக்கம், புகை மற்றும் புகையிலை ஒழிப்பு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கைவிட வலியுறுத்தியும் பிரசாரம் நடக்கிறது. வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் மரம் நடும் விழா நடக்கிறது.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.