/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரெப்கோ வணிகம் ரூ.100 கோடி: துணை பொது மேலாளர் தகவல்ரெப்கோ வணிகம் ரூ.100 கோடி: துணை பொது மேலாளர் தகவல்
ரெப்கோ வணிகம் ரூ.100 கோடி: துணை பொது மேலாளர் தகவல்
ரெப்கோ வணிகம் ரூ.100 கோடி: துணை பொது மேலாளர் தகவல்
ரெப்கோ வணிகம் ரூ.100 கோடி: துணை பொது மேலாளர் தகவல்
ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
புதுச்சேரி : ரெப்கோ வங்கியின் வணிகம் ரூ.
100 கோடியை எட்டியுள்ளதாக வங்கி துணை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் வணிகம் ரூ. 100 கோடியை கடந்த 16ம் தேதி எட்டியது. மேலும் கடந்த மாதம் முதல் டெபாசிட்டிற்கு 22 மாதத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு 10.75 சதவீதமும், மற்றவர்களுக்கு 10.50 சதவீத வட்டி தொடர்கிறது. மேலும், 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை போடப்படும் டெபாசிட்டுகளுக்கு 9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாதாந்திர மற்றும் 3 மாதத்திற்கு ஒரு முறை வட்டி பெறும் வசதியும், வட்டி முதிர்வு பெறும் தேதி அன்று (வட்டிக்கு வட்டி) பெறும் வசதியும் உள்ளது. நகைக்கடன் தினந்தோறும் கிராமிற்கு 1800 ரூபாய் வரை மிக குறைந்த வட்டியில் உடனுக்குடன் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.