/உள்ளூர் செய்திகள்/கரூர்/மக்கள் பாதை பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு!கரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம்மக்கள் பாதை பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு!கரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம்
மக்கள் பாதை பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு!கரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம்
மக்கள் பாதை பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு!கரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம்
மக்கள் பாதை பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாளாச்சு!கரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம்
ADDED : ஜூலை 22, 2011 11:54 PM
கரூர்: முறையான குடிநீர் வழங்காத கரூர் நகராட்சி நிர்வாகம் மீது மக்கள் பாதையை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் 20வது வார்டுக்கு உட்பட்டது மக்கள் பாதை. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு கரூர் நகராட்சி மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு, தெருக்குழா ய் அமைக்கப்பட்டுள்ளது. பொ துவாக வீட்டுக்குழாய் கனெக்ஷனுக்கு ஆண்டுக்கு 1,000 ரூபாய் வரி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு மட்டும் குறைந்த அழுத்த தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுகிறது. இதனால் பகுதிமக்கள் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள தெருக் குழாய்களில் குடிநீரை பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர். மக்கள் பாதை பகுதியில் நகராட்சி மூலம் ஃபோர்வெல் போடப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதிலும், தற்போது மோட்டார் பழுது எனக்கூறி, குழாய்களை அப்புறப்படுத்தி விட்டனர். குடிநீர் மட்டும் குறைந்தளவில் வந்தும், உப்பு தண்ணீரை பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது உப்பு தண்ணீருக்கும் சிரமமப்பட வேண்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் பாதை பகுதிமக்கள் கூறியதாவது: முறையாக குடிநீர் வரி செலுத்தியும் இப்பகுதிக்கு குறைந்த அழுத்த தண்ணீர் மட்டும் வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடர்ந்து மூன்று முறை வந்த தண்ணீர் பாசி கலந்த நீராக வந்தது. இதுகுறித்து நகராட்சிக்கு தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த காலங்களில் வேகமாக வந்த தண்ணீர் தற்போது குறைந்த அழுத்த தண்ணீராக விநியோகம் செய்கின்றனர். கடந்த 13ம் தேதி வந்த தண்ணீர் தற்போது, 22ம் தேதி வரை ஆகியும் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் உள்ளனர். இதனால், பகுதி மக்கள் அருகில் இருக்கும் தெருக்குழாய்களில் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. வீட்டு இணைப்பு பெற்று, தெருக்குழாய் குடிநீர் பிடிக்கும் நிலை மக்கள்பாதை பகுதியில் மட்டும் தான் உள்ளது. குடிநீர் இல்லாமல் தவித்த மக்களுக்கு நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் உப்பு நீர் மட்டும் பக்கபலமாக இருந்தது. ஆனாலும், தற்போது ஆழ்குழாயில் மோட்டார் பழுது எனக்கூறி ஃபோர்வெல் குழாய்களை அகற்றியுள்ளனர். இதனால், குடிநீருக்காகவும் பகுதி மக்கள் பெரிதும் சிரமமப்பட்டு வருகின்றனர். கு டிநீர் எந்த நேரத்தில் திறந்துவிட ப்படும் என தெரியாமல் வேலை க்கு விடுப்பு போட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 'குடிநீர், சொத்து, வீட்டு வரி போன்றவை மக்கள் துரிதமாக செலுத்த வேண்டும்' எனக்கூறும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகத்திலும் போதிய அக்கரை காட்ட வேண்டும்.