Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாலை விழிப்புணர்வு கூட்டம்

சாலை விழிப்புணர்வு கூட்டம்

சாலை விழிப்புணர்வு கூட்டம்

சாலை விழிப்புணர்வு கூட்டம்

ADDED : ஜூலை 21, 2011 12:53 AM


Google News

உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடந்தது.

பள்ளித்தலைமையாசிரியர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மூத்த முதுகலை ஆசிரியர் அலிசேக் மன்சூர் வரவேற்றார்.உடுமலை போக்குவரத்து துறை ஆய்வாளர் ராஜ்கண்ணா,' சாலைப் போக்குவரத்தின் விழிப்புணர்வு, வாகனங்களில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து படங்களுடன் விளக்கி பேசினார். பின் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார். மேற்கு கொமரலிங்கம் துவக்கப்பள்ளியில், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆசிரியர் அருள்ஜோதி வரவேற்றார். தலைமையாசிரியர் சித்ரகலா தலைமை வகித்தார். கொமரலிங்கம் சுகாதார ஆய்வாளர் தாமரைக்கண்ணன் பேசினார். ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.இப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மாணவர்களுக்கு பல் பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us