/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலிமரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
மரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
மரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
மரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜூலை 21, 2011 12:38 AM
வால்பாறை : வால்பாறை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மரம் சரிந்துவிழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்குள்ள தனியார் எஸ்டேட் வனப்பகுதியில் உள்ள யூக்லிப்ட்ஸ் மரம் வெட்டும் பணி(கூப்பு மரம்) பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நேற்று மாலை கருமலை எஸ்டேட் பகுதியில் கொட்டும் மழையில் மரம் வெட்டும் பணியில் சக தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருமலை எஸ்டேட்டை சேர்ந்த முத்துக்குமார், பிரவின்குமார் ஆகியோர் மீது எதிர்பாராத விதமாக மரம் சரிந்து விழுந்தது.இதில் முத்துக்குமார்(24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரவின்குமார்(18) என்ற தொழிலாளிக்கு கால்எலும்பு முறிந்து, தோள் பட்டை எலும்பும் முறிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


