/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருநள்ளார் நளன் குளம் புனரமைப்புப் பணிகள் சனிபெயர்ச்சிக்குள் முடிக்க நடவடிக்கை தேவைதிருநள்ளார் நளன் குளம் புனரமைப்புப் பணிகள் சனிபெயர்ச்சிக்குள் முடிக்க நடவடிக்கை தேவை
திருநள்ளார் நளன் குளம் புனரமைப்புப் பணிகள் சனிபெயர்ச்சிக்குள் முடிக்க நடவடிக்கை தேவை
திருநள்ளார் நளன் குளம் புனரமைப்புப் பணிகள் சனிபெயர்ச்சிக்குள் முடிக்க நடவடிக்கை தேவை
திருநள்ளார் நளன் குளம் புனரமைப்புப் பணிகள் சனிபெயர்ச்சிக்குள் முடிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 19, 2011 12:09 AM
காரைக்கால் : டிசம்பரில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு முன் திருநள்ளார் நளன் குளம் புனரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வர்ர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் சன்னதி உள்ளது.
இங்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி விழா உலக பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2009ம் அக்டோபர் 29ம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒரே நாளில் திருநள்ளாரில் குவிந்தனர். ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆன்மிக தளமான திருநள்ளாரை மேம்படுத்தி பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், சாலை, குடிநீர் வசதி, கழிப்பறைகள், பஸ் நிறுத்தம், கோவில் புனரமைப்பு, நளன் குளத்தைப் புனரமைக்க அரசு திருநள்ளார் கோவில் நகர திட்டத்தை உருவாக்கியது. பல ஆண்டுகள் பேச்சு அளவிலேயே இருந்த திருநள்ளார் கோவில் நகர திட்டம் கடந்த 2008ம் ஆண்டு இறுதி வடிவம் பெற்றது. ஹட்கோ வங்கி உதவியுடன் 146 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு அப்போதைய கவர்னர் கோவிந்சிங்குர்ஜார் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கிடப்பில் போடப்பட்ட கோவில் நகரத் திட்டத்தில் முதற்கட்டமாக நளன்குளத்தை புனரமைக்க 6 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு இரண்டாவது முறையாக 2009 டிசம்பர் 15ம் தேதி கவர்னர் இக்பால்சிங் மீண்டும் அடிக்கல் நாட்டினார். நளன் குளத்தைச் சுற்றியுள்ள கடைகளை அகற்றி நளன் குளத்தை ஆழப்படுத்தி சுற்றி படித்துறைகள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. குளத்தை சுற்றி வணிக வளாகம், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் கட்டும் பணி துவக்கப்படவில்லை. வரும் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு முன் நளன்குளம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.