ADDED : ஜூலை 15, 2011 01:28 AM
மேலக்கால் : சோழவந்தான் அருகே மேலக்கால் கனவாய் கருப்பணசுவாமி, அய்யனார் சுவாமி கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகவிழா நடந்தது.
இக்கோயிலில் நேற்று காலை கருப்பணசுவாமி, அய்யனார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூசாரி பல்வேறு அபிஷேகம் செய்தார். பின்னர் யாகசாலையில் புனிதநீர் குடங்களை வைத்து சாஸ்தாமாணிக்கவாசக்குருக்கள் முன்னிலையில் விற்பன்னர்கள் பூஜை செய்ய, புனிதநீர் குடத்தை கிராம நிர்வாகஸ்தர்கள் ஊர்வலமாக எடுத்து கோயில் வர, சிவாச்சாரியார் கணேசர் குழுவினரால் ராஜாகோபுர கலசத்தில் வேதம் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. எம்.எல். ஏ.,க்கள் கருப்பையா, கதிரவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.