/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/வரதட்சணையாக கொடுத்த பணம், நகை திருப்பி தர வேண்டும் : கணவன் வீட்டு முன் மனைவி சத்யாகிரகம்வரதட்சணையாக கொடுத்த பணம், நகை திருப்பி தர வேண்டும் : கணவன் வீட்டு முன் மனைவி சத்யாகிரகம்
வரதட்சணையாக கொடுத்த பணம், நகை திருப்பி தர வேண்டும் : கணவன் வீட்டு முன் மனைவி சத்யாகிரகம்
வரதட்சணையாக கொடுத்த பணம், நகை திருப்பி தர வேண்டும் : கணவன் வீட்டு முன் மனைவி சத்யாகிரகம்
வரதட்சணையாக கொடுத்த பணம், நகை திருப்பி தர வேண்டும் : கணவன் வீட்டு முன் மனைவி சத்யாகிரகம்
புதுக்கடை : புதுக்கடை அருகே தங்கள் நகைகளையும், பணத்தையும் திருப்பி தர கேட்டும் கணவன்கள் வீட்டின் முன் மனைவியர் இரண்டாம் நாளாக தொடர்ந்து சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவருக்கும், முன்சிறை முட்டைக்குளத்தை சேர்ந்த பாலையன் மகள் இந்துவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஆறு மாதங்களுக்குள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இந்து முட்டக்குளத்தில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். ராஜையனின் இரண்டாவது மகன் சேகர் நாகர்கோவிலில் உள்ள தானியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கருங்கலை சேர்ந்த கபிரியேல் மகள் சுஜிக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுஜி அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்து, சுஜி மற்றும் இவர்களது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தாஸ் மற்றும் சேகர் வீட்டு முன் நேற்று முன்தினம் முதல் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் முன் இரவு மின்விளக்கால் வெளிச்சம் ஏற்படுத்தி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இப்போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.
திருமணம் முடிந்த அன்று என்னை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பிறகு அடித்து கொடுமைப்படுத்த துவங்கினார். கூடுதல் வரதட்சணை வாங்கி வா எனக்கூறி அடித்து விரட்டுவார். இப்பிரச்னை குறித்து பைங்குளம் கிராம பஞ்., தலைவர் சந்திரகுமார், விளாத்துறை கிராம பஞ்., தலைவர் சுரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது சேர்ந்து வாழலாம் என கூறி செல்வார். அதன் பின்னரும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே வரதட்சணையாக கொடுத்த 75 ஆயிரம் ரூபாயும், 23 பவுன் நகைகளையும் திரும்ப தரவேண்டும். நகையும், பணமும் தரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். இவ்வாறு இந்து கூறினார்.
சேகர் மனைவி சுஜி கூறியதாவது: எனக்கும், சேகருக்கும் கடந்த மே மாதம் 6ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த முதல் நாள் இரவே கூடுதல் வரதட்சணை வேண்டுமென கேட்டார். தொடர்ந்து கட்டிய புடவையுடன் ரோட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார். அதன் பின் கஷ்டப்பட்டு வீடு சேர்ந்தேன். இனி கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. நாங்கள் கொடுத்த வரதட்சணை ரூபாய் தரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். இவ்வாறு சுஜி கூறினார். வீட்டின் முன் உறவினர்கள் கஞ்சி காய்ச்சி குடித்தனர். பைங்குளம் கிராம பஞ்., தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய பா.ஜ., தலைவர் சவுந்தர்ராஜன், விளாத்துறை கிராம பஞ்., தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் மணிகண்டதாஸ், முன்சிறை பஞ்., யூனியன் கவுன்சிலர்கள் தேவதாஸ், செல்வராஜ், மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பொன்னப்பன் உட்பட பலர் சம்பவ இடம் வந்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடம் வந்த விளவங்கோடு தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மூன்று நாட்களுக்குள் பணமும், நகையும் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு நகையும், பணமும் உடனே தர வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிடமாட்டோம் என உறுதியாக கூறினர். போராட்டம் தொடர்வதால் பதட்டமும் நீடிக்கிறது.