/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மது விலை உயர்வு "குடி'மகன்கள் புலம்பல்மது விலை உயர்வு "குடி'மகன்கள் புலம்பல்
மது விலை உயர்வு "குடி'மகன்கள் புலம்பல்
மது விலை உயர்வு "குடி'மகன்கள் புலம்பல்
மது விலை உயர்வு "குடி'மகன்கள் புலம்பல்
ADDED : ஜூலை 14, 2011 01:10 AM
குற்றாலம் : மதுபானங்கள் விலை கிடுகிடு என உயர்த்தப்பட்டதால் 'குடி'மகன்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6,500 சில்லறை மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 500க்கும் மேற்பட்ட வகைகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு அனைத்து வகை மதுபானங்களின் விலையையும் ரூ.2 முதல் 5 வரை அரசு உயர்த்தியது. அதன்பிறகு விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களில் விலை உயர்வு காரணமாக வருவாயை பெருக்கும் நோக்கத்தில் அரசு கடந்த 2 தினங்களுக்கு முன் விலையை உயர்த்தியது.டாஸ்மாக் மதுக்கடைகளில் பல்வேறு மதுபானங்கள் இருந்தபோதும் குவாட்டர் மட்டுமே அசுர விற்பனையாகிறது. எனவே தான் குவாட்டரில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது.
போலி சரக்குகளும் குவாட்டரில் மட்டுமே ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது.தற்போது விலை ரூ.5 முதல் 20 வரை அதிகரித்துள்ளதால் அரசுக்கு 15 ஆயிரம் கோடி வரை வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. விலை உயர்வால் 'குடி'மகன்கள் புலம்பி வருகின்றனர். விலை உயர்ந்தாலும் விற்பனை குறையவில்லை. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மதுவிலை உயர்வை பொருட்படுத்தாமல் குடியுடன் ஆனந்த குளியலையும் மேற்கொள்கின்றனர்.


