/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்
கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்
கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்
கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்
ADDED : ஜூலை 13, 2011 09:58 PM
உடுமலை : உடுமலையில், கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம் நடந்தது.
பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அண்ணாமலை, 'கோட்டத்தில் கிராமிய
அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் இலக்கை அடைய வேண்டும்; மக்களிடம் இத்திட்டத்தை
முழுமையாக கொண்டு செல்ல @வண்டும்', என்றார். அஞ்சல்துறை உட்கோட்ட ஆய்வாளர்
செல்வம், உடுமலை தலைமை அஞ்சலகர் பாலகிருஷ்ணன், சேமிப்பு வங்கி அஞ்சல்
அலுவலர் ஜவஹர் ஆகியோர் பேசினர். முகாமில், ஒரு கோடியே 6 லட்சத்திற்குமேல்
மதிப்புள்ள பாலிசிகள் கோட்ட கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. அஞ்சலக ஆயுள்
காப்பீட்டுத்திட்டத்தில் மக்களை சேர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆதரவை
கோருவது உட்பட பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில், உடுமலை உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்புற அஞ்சல்
ஊழியர்களும் பங்கேற்றனர்.


