Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/6 நிமிடத்தில் முடிந்த கரூர் நகராட்சிக்கூட்டம் கூச்சல் குழப்பமின்றி நிறைவேறியது தீர்மானம்

6 நிமிடத்தில் முடிந்த கரூர் நகராட்சிக்கூட்டம் கூச்சல் குழப்பமின்றி நிறைவேறியது தீர்மானம்

6 நிமிடத்தில் முடிந்த கரூர் நகராட்சிக்கூட்டம் கூச்சல் குழப்பமின்றி நிறைவேறியது தீர்மானம்

6 நிமிடத்தில் முடிந்த கரூர் நகராட்சிக்கூட்டம் கூச்சல் குழப்பமின்றி நிறைவேறியது தீர்மானம்

ADDED : ஜூலை 13, 2011 02:28 AM


Google News

கரூர்: சில வார்டுகளில் திருத்தம் செய்து முடிவெடுக்க கவுன்சிலர்கள் கூறியதையடுத்து, மூன்று நகராட்சி, ஒரு பஞ்சாயத்தை கரூர் நகராட்சியுடன் இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ஆறே நிமிடத்தில் கூட்டம் நடந்து முடிந்தது. கரூர் நகராட்சி கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது. நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கமிஷனர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகிய பகுதிகளை இணைத்தும், கரூர் நகராட்சியில் தற்போது உள்ள வார்டுகளில் சீரமைக்கப்பட்டு குறைக்கப்பட்ட வார்டுகளுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றவும், நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.



நேற்று கூட்டம் துவங்கியதும், கவுன்சிலர்கள் வார்டு எண் 1, 2, 3, 4, 10, 11 ஆகிய வார்டுகளில் மக்கள் தொகை, வருமானம், பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மறு சீரமைப்பில் ஒரே மாதிரியாக பிரிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகிய பகுதிகளை இணைத்தும், கரூர் நகராட்சியில் தற்போது உள்ள வார்டுகளில் சீரமைக்கப்பட்டு குறைக்கப்பட்ட வார்டுகளுக்கு ஒப்புதல் அளித்தும் தீர்மானம் நிறைவேற்ற சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் சிவகாமசுந்தரி அறிவித்தார். மாலை 4.44 மணிக்கு துவங்கிய கூட்டம் 4.50 மணிக்கு முடிந்தது.



கூட்டம் துவங்கும் முன் கவுன்சிலர் ராஜலிங்கம் மொபைல் ஃபோனில் பெண் ஒருவர் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று புகார் கூற, அதற்கு பதிலளித்து சத்தமாக பேசிய கவுன்சிலர் ராஜலிங்கம், ''அக்கா, 10 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும்ணு, தலைவரே சொல்றாங்க... நான் அங்கிருந்து தான் பேசறேன்,'' என கூட்ட அரங்கில் பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் அப்பாவியாக பேசியதை கண்டு, தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us