கொலை, கடத்தலில் தேடப்பட்ட கர்பி தலைவர் சுட்டுக்கொலை
கொலை, கடத்தலில் தேடப்பட்ட கர்பி தலைவர் சுட்டுக்கொலை
கொலை, கடத்தலில் தேடப்பட்ட கர்பி தலைவர் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 13, 2011 12:16 AM
திபு : அசாம் மாநிலத்தில், போலீசாருடன் நடந்த சண்டையில், கர்பி மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில், கர்பி மக்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த சண்டையில், கர்பி மக்கள் விடுதலை அமைப்பின் தளபதியான அபாங் இங்தி, சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய கூட்டாளி, கடும் காயமடைந்தார். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து, ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட, முக்கிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை, கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் அபாங் இங்தி, பல ஆண்டுகளாக, போலீசாரால் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.