ADDED : செப் 03, 2011 12:19 AM
ஓசூர்: பாகலூரில் தாலியை அடமானம் வைத்து மது குடித்த கூலி தொழிலாளியை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகலூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சீனிவாசன் (35). இவரது மனைவி ராமக்கா (30). சீனிவாசன் வேலைக்கு செல்லாமல் தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் ராமக்காவின் தாலியை பறித்து சென்ற சீனிவாசன் அதனை அடகு வைத்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை ராமக்கா தட்டி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகலூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் விசாரிக்கின்றார்.