/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதிஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி
ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி
ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி
ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி
ADDED : ஆக 29, 2011 10:20 PM
திண்டிவனம் : முதல்வர் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசு இஸ்லாமியருக்கு உறுதுணையாக விளங்குமென அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் திண்டிவனம் வேதவள்ளி அம்மாள் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பொதுச்செயலர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ரபிதீன் வரவேற்றார். பள்ளி வாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் பலரும் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலம் மற் றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நோன்பு திறப்பு நிகழ்ச் சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமைச்சர் சண்முகம் பேசுகையில், நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் இப்தார் நிகழ்ச்சி இதுதான். பொதுவாழ்க்கையில் தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் இஸ்லாமிய சிறுபான்மை மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களுக்கு ஜெ., என்றுமே ஆதரவாக இருந்து வருகிறார். முதல்வர் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசு இஸ்லாமிய மக்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர் அரிதாஸ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நகர செயலாளர் வெங்கடேசன், கவுன்சிலர் அப்பாஸ் மந்திரி, வழக்கறிஞர் அம்ஜத்அலி மற்றும் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஷேக் அப்துல்லா நன்றி கூறினார்.