/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தண்ணீர் வினியோகத்தில் குறைபாடு "ராகவேந்திரா கார்டன்' மக்கள் அவதிதண்ணீர் வினியோகத்தில் குறைபாடு "ராகவேந்திரா கார்டன்' மக்கள் அவதி
தண்ணீர் வினியோகத்தில் குறைபாடு "ராகவேந்திரா கார்டன்' மக்கள் அவதி
தண்ணீர் வினியோகத்தில் குறைபாடு "ராகவேந்திரா கார்டன்' மக்கள் அவதி
தண்ணீர் வினியோகத்தில் குறைபாடு "ராகவேந்திரா கார்டன்' மக்கள் அவதி
ADDED : ஜன 05, 2011 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூர் : 'போர்வெல் தண்ணீரைக்கூட சரிவர வினியோகிப்பதில்லை' எனக்கூறி, ஸ்ரீராகவேந்திராகார்டன் பகுதி மக்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
வீரகேரளம் பேரூராட்சி 10வது வார்டில் ஸ்ரீராகவேந்திரா கார்டன் பகுதி உள்ளது.
இங்கு 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 20 நாளுக்கொருமுறைதான் சிறுவாணி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போர்வெல் நீர் வினியோகிப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிறது. தண்ணீர் கிடைக்காமல், ஆவேசமடைந்த ஸ்ரீராகவேந்திரா கார்டன் பகுதி மக்கள் நேற்று வீரகேரளம் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பேரூராட்சி ஆபீசிலிருந்த, பேரூராட்சி தலைவர் பக்தவச்சலம், துணைதலைவர் கதிரேசன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
'ஓரிரு நாட்களில் தண்ணீர் சீராக வினியோகிக்கப்படும்' என உறுதியளித்தனர்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஸ்ரீராகவேந்திரா கார்டன் பகுதி, குடியிருப்போர் சங்க தலைவர் கோபிநாத் கூறுகையில்,''போர்வெல் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு 15 நாளுக்கு மேலாகி விட்டது. பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் மோட்டார் பழுதென தெரிவிக்கப்பட்டது. ஆனால், மோட்டார் பழுதாகி, பல நாட்களாகி விட்டது. யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர்வெல் தண்ணீர் கூட இல்லாததால், இப்பகுதி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்,''என்றார்.


