/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : 6.38 லட்சம் கார்டுகளுக்கு வழங்க ஏற்பாடுஇலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : 6.38 லட்சம் கார்டுகளுக்கு வழங்க ஏற்பாடு
இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : 6.38 லட்சம் கார்டுகளுக்கு வழங்க ஏற்பாடு
இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : 6.38 லட்சம் கார்டுகளுக்கு வழங்க ஏற்பாடு
இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : 6.38 லட்சம் கார்டுகளுக்கு வழங்க ஏற்பாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடியில் தமிழக அரசின் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல இணைப்பதிவாளர் சிவாஜி வரவேற்றார்.
இலவச பொங்கல் பையை வழங்கி மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: தமிழகத்தில் இலவச 'டிவி', காஸ் அடுப்பு, பொங்கல் உடை, பொங்கல் பை, உணவுப்பொருட்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதை சில அரசியல் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றனர். சென்னையில் நடந்த விழாவில் 'ஏழைகள் இந்த நாட்டில் இருக்கும் வரை அவர்கள் வாழ்வுக்காக இலவச பொருட்கள் வழங்குவது தொடரும்,' என முதல்வர் கூறியுள்ளார். எம்.எல்.ஏ., யசோதா பேசுகையில், 'ஏழைகள் மகிழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஐக்கியமாகிவிடுகிறார்,' என்றார். 'ஏழை தொழிலாளர்கள் பொங்கல் தினத்திலும் மாலை வரை வேலைசெய்துவிட்டு அங்கு கிடைக்கும் சம்பளத்தில் பொங்கலுக்கான பொருட்கள், கரும்பு, ரேஷன் பொருட்களை வாங்கிச் சென்று மாலை, இரவில் பொங்கலிடுவார்கள். ஆனால், பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன் தாய் வீட்டு சீதனமாகத்தான் இதுபோன்ற பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். அதுபோல தமிழகத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது,' என தலைமைச் செயலர் மாலதி கூறினார். இதுபோல, மாநிலம் முழுவதும் பொங்கல் பை வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி ஒரு தந்தைபோல இருந்து இவற்றை மக்களுக்கு வழங்கி வருகிறார். இதை அனைவரும் வாங்கி பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்,'' என்றார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்விசிவஞானம், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் செல்வம், கூட்டுறவு முதுநிலை மண்டல மேலாளர் தேவதாஸ், கவுன்சிலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். சரக துணைப்பதிவாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.


