ADDED : ஜன 02, 2011 01:28 AM
பந்தலூர்:பந்தலூர் வெள்ளேரி பகுதியில், மூதாட்டியை கொன்ற விவகாரத்தில், பெண் ஒருவரிடம் போலீ சார் விசாரிக்கின்றனர்.
தமிழக-கேரளா எல்லையான வெள்ளேரி ஓனிவயல் பகுதியை சேர்ந்த லட்சுமி (75), கடந்தாண்டு பிப்., 4ம் தேதி கொலை செய்யப்பட்டார்; நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அம்பலமூலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவாலா டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். லட்சுமி வீட்டுக்கு அருகில் இருந்தவரும், தற் போது கேரளா மாநிலம் மேப்பாடி பகுதியில் திருமணம் செய்து அங்கு வசிப்பவருமான ஜீனா (26) என்ற பெண்ணிடம், சந்தேக த்தின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின் றனர். விசாரணைக்கு பின், முழு விபரம் வெளிச்சத் துக்கு வரும்.


