ராமர் கோவிலுக்கு சர்ச்சை நிலம் வி.எச்.பி., போராட்ட எச்சரிக்கை
ராமர் கோவிலுக்கு சர்ச்சை நிலம் வி.எச்.பி., போராட்ட எச்சரிக்கை
ராமர் கோவிலுக்கு சர்ச்சை நிலம் வி.எச்.பி., போராட்ட எச்சரிக்கை
ADDED : ஜன 02, 2011 12:53 AM
அயோத்தி : ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள அனைத்து நிலங்களையும் ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும்' என, மத்திய அரசுக்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அயோத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கான கற்களை செதுக்கும் பணி ஒரு மாதத்தில் துவங்கப்படும். ராமர் கோவில் கட்டுவதற்கான இட ஒதுக்கீடு குறித்து, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தவிர, ராமர் கோவில் கட்டுவதற்கு சர்ச்சைக்குரிய அனைத்து நிலத்தையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், விஸ்வ இந்து பரிஷத் சார்பில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதனிடையே, ராமர் கோவில் நிர்மானம் குறித்து கட்டடக் கலை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி உதவி செய்யுமாறு ராம பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.


