தமிழகத்தில் மின்திருட்டு அதிகரிப்பு : பறக்கும்படை "ரெய்டு'
தமிழகத்தில் மின்திருட்டு அதிகரிப்பு : பறக்கும்படை "ரெய்டு'
தமிழகத்தில் மின்திருட்டு அதிகரிப்பு : பறக்கும்படை "ரெய்டு'
ADDED : ஜன 01, 2011 11:54 PM
ராமநாதபுரம் : தமிழகத்தில் மீண்டும் மின்திருட்டு அதிகரிக்கும் பகுதிகளை கணக்கிட்டு, அங்கு பறக்கும் படையினர் 'ரெய்டு' நடத்தி வருகின்றனர்.
பற்றாக்குறையால் போதிய மின்வினியோகம் செய்யமுடியாமல் தமிழக மின்வாரியம் திணறி வருகிறது. மின்சாரத்தை அதிகரிக்கும் வேலைகள் ஒருபுறம் நடக்க, மின்திருட்டு மறுபுறம் ஜரூராக நடந்து வருகிறது. அந்தந்த பகுதிகளின் மின்வாரிய அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு, தொடர்ந்து வரும் இத்திருட்டை கட்டுப்படுத்த முடியாமல் மின்வாரியம் திணறுகிறது. திருட்டை ஒழித்தால் மட்டுமே பற்றாக்குறையை போக்க முடியும் என்பதால், இதில் தீவிரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மாவட்டத்தின் மின்கட்டண விபரங்களையும், செலவான மின்சாரத்தையும் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் பெறப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் மின்சாரம் செலவானது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு மின்வாரிய பறக்கும் படை சென்று வருகிறது. ராமநாதபுரம் வந்த இப்படையினர், ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நண்டு கம்பெனிகளில் 'ரெய்டு' நடத்தினர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இது போன்ற ரெய்டுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெறப்படும் கட்டணத்தை விட கூடுதலாக மின்சாரம் செலவான பகுதிகளில், ஒரே நேரத்தில் 'ரெய்டு' நடத்தி வருகின்றனர். ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், கடலோர பகுதிகளின் நண்டு கம்பெனிகள் மீது சந்தேகித்து 'ரெய்டு' நடந்தது , என்றார்.


