/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/"டிவி' வழங்கும் விழாவில் கவுன்சிலர் கணவர் தகராறு"டிவி' வழங்கும் விழாவில் கவுன்சிலர் கணவர் தகராறு
"டிவி' வழங்கும் விழாவில் கவுன்சிலர் கணவர் தகராறு
"டிவி' வழங்கும் விழாவில் கவுன்சிலர் கணவர் தகராறு
"டிவி' வழங்கும் விழாவில் கவுன்சிலர் கணவர் தகராறு
ADDED : டிச 31, 2010 02:16 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 45வது வார்டில் இலவச 'டிவி' வழங்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவர் தகராறில் ஈடுபட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் இலவச 'டிவி' வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி 45வது வார்டில், ஈரோடு எல்.எல்.ஏ., ராஜா, இலவச 'டிவி' வழங்கினார். 1,130 'டிவி'க்கள் இந்த வார்டுக்கு ஒதுக்கப்பட்டது. வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த காஞ்சனா உள்ளார். 'டிவி' வழங்கும் விழாவை தி.மு.க.,வினர் முன்னின்று நடத்தினர். இதனால், தி.மு.க.,வினரிடம் கவுன்சிலர் காஞ்சனாவின் கணவர் பழனிசாமி, தகராறில் ஈடுபட்டுள்ளார். 'டிவி' வழங்கும் பணி தாமதமாகியது. சூரம்பட்டி போலீஸார் வந்து பிரச்னையை தீர்த்தனர். தி.மு.க.,வினர் கூறுகையில், 'தி.மு.க., நிகழ்ச்சியில் பொதுவாக அ.தி.மு.க.,வினர் கலந்து கொள்வதில்லை. அ.தி.மு.க.,வின் கவுன்சிலரின் கணவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரச்னையை கிளப்புகிறார். தி.மு.க.,வினர் இடையூறு செய்வதாக தேவையில்லாத பிரச்னையை கிளப்புவதால் தகராறு ஏற்படுகிறது' என்றனர். கவுன்சிலரின் கணவர் பழனிசாமி கூறுகையில்,''பொது மக்கள் வரிப்பணத்தில் 'டிவி' வழங்கப்படுகிறது. தி.மு.க.,வினர் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் 'டிவி' வழங்குகிறோம்,'' என்றார்.


