Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தமிழக வனத்தில் 4,100 யானைகள் :வன அமைச்சர் செல்வராஜ் தகவல்

தமிழக வனத்தில் 4,100 யானைகள் :வன அமைச்சர் செல்வராஜ் தகவல்

தமிழக வனத்தில் 4,100 யானைகள் :வன அமைச்சர் செல்வராஜ் தகவல்

தமிழக வனத்தில் 4,100 யானைகள் :வன அமைச்சர் செல்வராஜ் தகவல்

ADDED : டிச 30, 2010 01:33 AM


Google News

ஓசூர்: ''தமிழகத்தில் 4,100 யானைகள் உள்ளன, '' என, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்தார்.ஓசூர் அடுத்த சானமாவு, பென்னிக்கல், போடூர் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகளால் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தின்னூரில் நேற்று நடந்தது.மாவட்ட வன அலுவலர் உலகநாதன் தலைமை வகித்தார்.

வனத்துறை அமைச்சர் செல்வராஜ், பாதிக்கப்பட்ட 669 விவசாயிகளுக்கு 31 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாய் நிவாரண உதவி வழங்கி பேசியதாவது:யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை யாரும் அரசியலாக்க கூடாது. யானைகள் இயல்பாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதுபோன்ற உரிமை வனவிலங்குகளுக்கும் உள்ளன.வனவிலங்குகள் தங்கள் உரிமைகளை கேட்டு பெற முடியாமல் உள்ளன. அவற்றின் உரிமை, வழித்தடங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மனித வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் காடுகள் அழிக்கப்படுவதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன. விவசாயிகளை பாதுகாக்கவும் வேட்டை தடுப்பு முகாம், யானை பள்ளம் மற்றும் சூரிய மின்வேலிகள் அமைக்கும் பணி நடக்கிறது.நாட்டில் மொத்தம் 24 ஆயிரம் யானைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீதம் யானைகள் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளன.தமிழகத்தில் 4,100 யானைகளும், கர்நாடகாவில் 6,000 யானைகளும், கேரளாவில் 4,000 யானைகளும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில், ஓசூர் வனப்பகுதியில் 300 யானைகளும், 1,000 மான்களும், 200 காட்டு பன்றிகளும், 50 சிறுத்தை புலிகளும், 100 காடடு மாடுகளும் உள்ளன. சமீப காலமாக வனப்பகுதியில் வனவிலங்குகள் இனப்பெருக்கும் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக உதவி வனஅலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். சப்-கலெக்டர் பிரசாந்த் முகுந்த் வடநேரே, எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகராட்சி தலைவர் சத்யா, துணை தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us