Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சுற்றுலாவினரை இழுக்கும் குகைகள்

சுற்றுலாவினரை இழுக்கும் குகைகள்

சுற்றுலாவினரை இழுக்கும் குகைகள்

சுற்றுலாவினரை இழுக்கும் குகைகள்

ADDED : ஜூன் 04, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
மைசூரு நகரின் சுற்றுப்பகுதிகளில், பல்வேறு இடங்களில் குகைகள் அமைந்துள்ளன. இயற்கை அழகுடன், அமைதியான சூழ்நிலையில் உள்ள குகைகள், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன.

பொதுவாக மைசூரு வரும் சுற்றுலா பயணியர், அரண்மனை, மிருகக்காட்சி சாலை, புராதன கோவில்கள் என பல்வேறு இடங்களை பார்க்கின்றனர். மைசூரு அருகிலேயே குடகு, சிக்கமகளூரு போன்ற அற்புதமான மலைகள், குகைகள் உள்ளன. இவைகளை தவிர மைசூரில் விசித்திரமான குகைகளும் உள்ளன. இந்த இடங்கள் மனதுக்கும், உடலுக்கும் குதுாகலத்தை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகமே இல்லை.

பிளகல் ரங்கசுவாமி மலை குகைகள்: பெங்களூரில் இருந்து 70 கி.மீ., மைசூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில், பிளகல் ரங்கசுவாமி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் அரிதான குகைகள் உள்ளன. பசுமையான மரம், செடி, கொடிகள் தாவரங்களின் நடுவே, குகைகள் தென்படுகின்றன.

இது இயற்கையை ரசிக்கவும், மலையேற்றத்துக்கும் தகுதியான இடமாகும். மழைக்காலத்தில் சென்றால், மறக்க முடியாத அனுபவத்தை பெறலாம்.

பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவில் பிளகல்ரங்கசுவாமி மலை உள்ளது. மலை உச்சியில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, வியக்க வைக்கும் அற்புதமான காட்சிகளை பார்க்கலாம். பெங்களூருக்கு வெகு அருகில் இருப்பதால், வார இறுதி நாட்களில் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர், ஐ.டி., ஊழியர்கள், கல்லூரி மாணவர், மாணவியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

மலையில் ஏராளமான குகைகள் உள்ளன. சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் உள்ளே சென்று ரசிக்கின்றனர். மன்னர் ஆட்சி காலத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல குகைகள் அமைக்கப்பட்டதாம்.

எப்படி செல்வது?

மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து, கனகபுராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், தனியார் பஸ்கள் இயங்குகின்றன. வாடகை வாகனங்கள், ரயில் வசதியும் உள்ளது. சொந்த வாகனங்களிலும் வரலாம்.

நேரம்: காலை 9:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை. தொலைபேசி எண்: 70222 63474

கவலேதுர்கா குகைகள்: ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவில் கவலேதுர்கா மலை உள்ளது. இதன் மீது பிரம்மாண்டமான கோட்டை கட்டப்பட்டுள்ளது. தீர்த்தஹள்ளி - சாலுார் பாதையில், அடர்த்தியான காட்டுப்பகுதியில் நடந்து சென்றால், இக்கோட்டையை காணலாம். இது வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும்.

இக்கோட்டை கெளதி சமஸ்தானத்தின் நான்காவது மற்றும் இறுதி ஆட்சி காலத்தில் தலை நகராக இருந்தது. 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அன்றைய மன்னர்களின் ஆட்சித்திறன், கலைத்திறன், கலை, கலாச்சாரத்துக்கு சாட்சியாக நிற்கிறது.

எப்படி செல்வது:

மைசூரில் இருந்து 130 கி.மீ., பெங்களூரில் இருந்து, 387 கி.மீ., தொலைவில் கவலேதுர்கா அமைந்துள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், தனியார் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், ஷிவமொக்காவில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் கவலேதுர்காவுக்கு செல்லலாம்.

நேரம்: காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை

தொடர்பு எண்: 08181 229761, 90086 56579, 76249 87430, 94481 27761

கோட்டை அமைந்துள்ள கவலேதுர்கா மலையில், அற்புதமான குகைகளையும் காணலாம். பல மர்மங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளன.

சுற்றுலா பயணியரை தன் வசம் சுண்டி இழுக்கின்றன. இங்குள்ள குகைகளில், முனிவர்கள் தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சுற்றுலா பயணியரை தன் வசம் சுண்டி இழுக்கின்றன. இங்குள்ள குகைகளில், முனிவர்கள் தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us