Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/ காலையில் ஜிம் மாலையில் நடை உடலை 'பிட்' ஆக வைத்திருக்கும் மந்திரம்

காலையில் ஜிம் மாலையில் நடை உடலை 'பிட்' ஆக வைத்திருக்கும் மந்திரம்

காலையில் ஜிம் மாலையில் நடை உடலை 'பிட்' ஆக வைத்திருக்கும் மந்திரம்

காலையில் ஜிம் மாலையில் நடை உடலை 'பிட்' ஆக வைத்திருக்கும் மந்திரம்

ADDED : செப் 07, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நமது உடலை பேணிக்காப்பது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்யலாம்; நடைபயிற்சி செய்யலாம். எதுவாக இருந்தாலும் 'பிட்'டாக வைத்துக் கொண்டால், நோயின்றி வாழலாம். இதற்காகவே பலரும் பல வகைகளில் மெனக்கெடுகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் செல்வராஜ், தினமும் எத்தகைய பயிற்சி மேற்கொள்கிறாரென, நமது வாசகர்களுக்காக கூறியது:

தினமும் காலையில் ஒரு மணி நேரம் ஜிம்முக்கு செல்வேன். மாலையில் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில் ஒரு மணி நேரம் 'வாக்கிங்' சென்று விடுவேன். உடற்பயிற்சியை பலர் சிரமமாக நினைக்கின்றனர்; தினந்தோறும் செய்தால் புத்துணர்ச்சி அளிக்கும்.

உடற்பயிற்சியில் கார்டியோ, எடை துாக்குதல், தசை பயிற்சி ஆகிய மூன்றையும் சரிவிகிதத்தில் செய்து விடுவேன். தினமும் இம்மூன்று பயிற்சிக்கும், 20 நிமிடம் திட்டமிட்டால் போதும்; 80 வயதிலும் எளிதாக தரையில் அமர்ந்து எழுந்திருக்கலாம்.

சாப்பிடும் அளவை, எந்த தரத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியம். பாமாயில், ஒரு முறை பயன்படுத்திய ஆயிலை முற்றிலும் தவிர்த்து விடுவேன். வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விரும்புவேன்; மாதத்துக்கு இரண்டு, மூன்று முறை நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது தவிர்க்க முடியாது. தற்போது காலையில் இட்லி, தோசை தவிர்த்து சுண்டல், பச்சை பயறு மட்டும் 150 கிராம் எடுத்துக் கொள்கிறேன். மதியம் வழக்கமான உணவு, இரவு 8 மணிக்கு முன் சாப்பிட்டு விடுவேன்; 10.30 மணிக்கு உறங்கச் சென்று விடுவேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us