Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/பேஷன்/ ஆண்களின் ஆடைக்கும் வந்தாச்சு புது டிரெண்ட்!

ஆண்களின் ஆடைக்கும் வந்தாச்சு புது டிரெண்ட்!

ஆண்களின் ஆடைக்கும் வந்தாச்சு புது டிரெண்ட்!

ஆண்களின் ஆடைக்கும் வந்தாச்சு புது டிரெண்ட்!

ADDED : செப் 06, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
ஒரு காலத்தில், வெளிநாடுகளில் பரவலாக அறிமுகமாகும் டிரெண்ட் ஆடைகள் இந்தியாவை வந்தடைவதற்கு சில மாதங்களாகும். உதாரணத்துக்கு, பாரிஸ், மிலான், நியூயார்க், லண்டன் போன்ற பேஷன் ஹப்புகளில் புதிய ஸ்டைல்கள் முதலில் அறிமுகமாகும். அதன்பின் மும்பை, டில்லி வழியாகவே நம் ஊர்களுக்கு வந்து சேர்ந்தன.

இன்றைய தினம் அப்படியல்ல. உலகம் முழுவதும் பேஷன் டிரெண்ட்கள் பரவிக் கிடக்கின்றன. அனைத்து நகரங்களிலும் உடனுக்குடன் அறிமுகமாகி, கடைகளில் காணப்படுகின்றன. புதுவித ஸ்டைல்கள் நாளுக்குநாள் அறிமுகமாகி வரும் சூழலில், ஆண்கள் அணியும் ஒவ்வொரு ஆடையிலும் தனித்துவத்தை பார்க்க முடிகிறது.

“பேஷன் என்பது பெண்களுக்கு மட்டும் என்கிற காலம் சென்று விட்டது. லோ-ஹிப் பேண்ட்? இதுவும் கடந்துபோன டிரெண்ட்! இப்போது 'ரிலாக்ஸ் பிட்' மற்றும் 'பிரீதபில் பேண்ட்' தான் முன்னணியில் இருக்கிறது,'' என்கிறார் பேஷன் டிசைனர் நந்தா.

''இது, ஸ்கின்னி ஜீன்ஸ் டைப்பாக இருந்தாலும், உடம்புடன் இறுக்கமாக இருக்காது. மெல்லிய துணியில், காற்றோட்டமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்திருந்தாலும் இலகுவாக நகர முடியும். அதுமட்டுமின்றி, 'மூவிங் கம்பர்ட்' என்பதை முக்கியமாக எடுத்துக் கொண்டு வடிவமைக்கப்படும் இன்றைய ஆடைகள், அணிபவரின் இயல்பான 'மூவ்'களை கட்டுப்படுத்தாமல், ஸ்டைலிஷாகவும் கம்ஃபர்ட்டாகவும் இருக்க உதவுகின்றன'' என்கிறார் நந்தா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us