/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/வாசமாக வலம் வர: டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே பெர்ப்யூம் எது சரியானது?வாசமாக வலம் வர: டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே பெர்ப்யூம் எது சரியானது?
வாசமாக வலம் வர: டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே பெர்ப்யூம் எது சரியானது?
வாசமாக வலம் வர: டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே பெர்ப்யூம் எது சரியானது?
வாசமாக வலம் வர: டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே பெர்ப்யூம் எது சரியானது?

டியோடரண்ட்
வியர்வை அதிகமாக வரும் நபர்கள், டியோடரண்ட் பயன்படுத்தலாம். இது வியர்வையை குறைக்காது; ஆனால் வியர்வையால் வரும் நாற்றத்தை குறைக்கும். குளித்த உடனே, அக்குள் பகுதியில் மட்டும் லேசாக தடவலாம்; அல்லது ஸ்ப்ரே செய்யலாம். முழு உடலில் தேவை இல்லை. உடைகளின் மேல் அப்ளை செய்தால் வாசனை வரவே வராது!
பாடி ஸ்ப்ரே
பாடி ஸ்ப்ரேவை 15-20 செ.மீ. தூரத்தில் வைத்து மார்பு, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் லேசாக ஸ்ப்ரே செய்யலாம். முகத்தில் அல்லது புண், கீறல் இருக்கும் இடங்களில் தவிர்க்கவும். சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலும் பயன்படுத்த வேண்டாம். சிறிதளவு ஸ்ப்ரே போதுமானது.
பெர்ப்யூம்
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கே பெர்ப்யூம். குளித்த பிறகு, உடல் உலர்ந்ததும், கழுத்து, மணிகட்டு போன்ற 'பல்ஸ் பாயின்ட்ஸ்' எனப்படும் இடங்களில் மட்டும் லேசாக தடவலாம். வாசனை நீண்ட நேரம் நிலைக்கும். இப்படி, எந்த வாசனை பொருளையும், எப்படி, எங்கே என்று அறிந்து பயன்படுத்தினால் தான், நாள் முழுவதும் பயன்!