/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/ ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு... சீரம் பயன்படுத்தி பாருங்க லேடீஸ்! ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு... சீரம் பயன்படுத்தி பாருங்க லேடீஸ்!
ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு... சீரம் பயன்படுத்தி பாருங்க லேடீஸ்!
ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு... சீரம் பயன்படுத்தி பாருங்க லேடீஸ்!
ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு... சீரம் பயன்படுத்தி பாருங்க லேடீஸ்!
ADDED : செப் 21, 2025 05:31 AM

இ ன்று பெரும்பாலான பெண்கள் ப்ரீ ஹேர் ஸ்டைலை விரும்புகின்றனர். இருப்பினும், அனைத்து கூந்தல் வகைகளுக்கும் இந்த ஸ்டைல் பொருத்தமாக இருக்காது என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா.
கூந்தலில் இயற்கையான ஈரப்பதம் குறைவாக இருந்தால், அது வறண்டு காணப்படும். இத்தகைய கூந்தலுக்கு ப்ரீ ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருக்காது. அதேபோல், எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் கூந்தல் எளிதில் பிசுபிசுப்பாகி, ப்ரீ ஹேர் அழகை கெடுத்துவிடும். எனவே, ப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு சீரம் பயன்படுத்துவது முக்கியம். சீரம் உங்கள் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. முடியின் சிக்கு சிக்கல்களை குறைத்து, எளிதாக சீவ உதவுகிறது. இதனால், ப்ரீ ஹேர் ஸ்டைல் நாள் முழுவதும் அழகாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை முதலில், உங்கள் கூந்தலை நன்றாக ஷாம்பு போட்டு அலசி, உலர வைக்கவும். கூந்தல் சிறிது ஈரப்பதமாக இருக்கும்போது சீரம் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் கூந்தலின் நீளத்திற்கு ஏற்ப, சில துளிகள் சீரத்தை உள்ளங்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதிக சீரம் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது கூந்தலை எண்ணெய் பசையாக காட்டும்.
சீரத்தை உங்கள் உள்ளங்கைகளில் பரப்பி, கூந்தலின் நடுப்பகுதியில் இருந்து நுனி வரை மெதுவாக தடவவும். முடியின் வேர்க்கால்களில் சீரம் தடவுவதை தவிர்க்கவும், ஏனெனில் இது முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
சீரம் தடவிய பிறகு, மென்மையான சீப்பைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலை மெதுவாக சீவவும். இப்படி செய்தால், ப்ரீ ஹேர் ஸ்டைல் எப்பொழுதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும், என்கிறார் ரம்யா.