/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு
சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு
சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு
சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு
ADDED : செப் 20, 2025 11:14 PM

மாண்டியா டவுன் ஸ்ரீரங்கப்பட்டணா சாலையில் வசிப்பவர் ரங்கசாமி, 55. மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊர்களில், சைக்கிளை மிதித்து, ரங்கசாமி செல்வதை அடிக்கடி பார்க்கலாம்.
சைக்கிளில் செல்வது சாதாரண விஷயம் தான். ஆனால் ரங்கசாமி சைக்கிளில் செல்வதை பார்ப்போருக்கு, உத்வேகம் போன்று அவர் தெரிவார். இதற்கு காரணம் கன்னட மொழியை வளர்க்க, அவர் எடுத்துள்ள முயற்சி தான்.
தன் சைக்கிளில் மறைந்த நடிகர் விஷ்ணுவர்த்தன் புகைப்படம், கன்னட கொடி, கன்னடத்தை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பதாகையை கட்டிக் கொண்டு ஊர், ஊராக சென்று, கன்னட மொழியை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
இதுகுறித்து ரங்கசாமி கூறியதாவது:
எந்த மாநிலத்தினராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழிக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. நடிகர் விஷ்ணுவர்த்தனின் தீவிர ரசிகரான எனக்கு, கன்னட மொழி மீது கொள்ளை பிரியம்.
கன்னட மொழி நன்கு வளர்ந்து உள்ளது. இன்னும் மொழியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் ஆசை. இதனால் ஊர், ஊராக சைக்கிளில் சென்று, அரசு, தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு, கன்னட மொழியை கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். வாழ்க்கை பாடத்தையும் அவர்களுக்கு கன்னடத்திலேயே எடுத்துச் சொல்கிறேன்.
மைசூரு, மாண்டியா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமின்றி, வடமாவட்டங்களுக்கும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன்.
அரசு பள்ளிகளில் கரும்பலகை மோசமான நிலையில் இருந்தால், எனது சொந்த செலவில் கருப்பு பெயின்ட் அடித்துக் கொடுக்கிறேன். பெயின்டிங், என் தொழில்.
என் சைக்கிள் பயணத்தை கன்னட அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நடிகர் முக்கிய மந்திரி சந்துருவும் பாராட்டி இருக்கிறார். என்னால் முடிந்த வரை, சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -