/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியர்களின் 'அன்பு பரிசு'வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியர்களின் 'அன்பு பரிசு'
வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியர்களின் 'அன்பு பரிசு'
வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியர்களின் 'அன்பு பரிசு'
வேலை செய்யும் பள்ளிக்கு ஆசிரியர்களின் 'அன்பு பரிசு'

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், வளர்ந்த பின், தாங்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நிதி வழங்கி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஆசிரியர்கள், தாங்கள் வேலை செய்யும் பள்ளிக்கு நிதி வழங்கி கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இப்படி ஒரு அபூர்வம், மங்களூரில் நடந்துள்ளது.
மங்களூரு சக்திநகரில் நல்யபாடு என்ற இடத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ், குவெம்பு நுாற்றாண்டு விழா மேம்பாட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தம் 16 வகுப்பறைகள் உள்ளன.
நல்ல உறவு
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களிடையே நல்ல உறவு உள்ளது. தலைமை ஆசிரியர் தாக் ஷாயணி, பள்ளியின் மேம்பாடு குறித்தே சிந்தித்துக் கொண்டே இருப்பார்.
சில மாதங்களுக்கு முன்பு, பிரதீப் என்ற ஆசிரியர் பணிக்கு சேர்ந்தார். இவர், பள்ளியை மேம்படுத்துவது குறித்து, தலைமை ஆசிரியரிடம் ஒரு திட்டத்தை கூறி உள்ளார். அவரும் உடனே அனுமதி அளித்தார்.
இத்திட்டத்தின்படி, பள்ளி வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஒரு உண்டியல் வைக்கப்படும். இதில் ஆசிரியர்கள் தங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை செலுத்துவர். மாதம் ஒரு முறை, உண்டியல் தொகை எண்ணப்படும்.
பின், குலுக்கல் முறையில் வகுப்பறைகள் தேர்வு செய்யப்படும். அந்த தொகை, வகுப்பறையின் பொறுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒரு முறை
அவர், அத்தொகையில், வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள், மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்களை வாங்கலாம். ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் வகுப்பு, மறுமுறை தேர்ந்தெடுக்கப்படாது.
நாட்கள் செல்ல செல்ல ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளியில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களும் பணத்தை செலுத்தத் துவங்கினர். இத்திட்டத்திற்கு 'குருகாணிக்கே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்திட்டம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவங்கி, தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொன்றுக்கும் அரசையை நம்பி இருக்காமல், நம்மால் முடிந்த செயல்களை செய்தால், நமக்கு பாராட்டு நிச்சயமே.