Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆரோக்கியத்தை தரும் முருங்கை கீரை பரோட்டா

ஆரோக்கியத்தை தரும் முருங்கை கீரை பரோட்டா

ஆரோக்கியத்தை தரும் முருங்கை கீரை பரோட்டா

ஆரோக்கியத்தை தரும் முருங்கை கீரை பரோட்டா

ADDED : ஜூன் 14, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
முருங்கை மரத்தின் காய், இலை, பூ என, ஒவ்வொன்றும் உடல் ஆரோக்கியத்தை அளிக்கிறது. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. 'மருத்துவ மரம்' என்றும் முருங்கை மரத்தை அழைக்கின்றனர். முருங்கை இலை, காய், பூக்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி மற்றும் சி அடங்கியுள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உட்பட, பல விதமான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதே காரணத்தால் பலரும், முருங்கை இலை, காய்களை அவ்வப்போது உணவில் சேர்க்கின்றனர். ஆனால் சிறு பிள்ளைகள் சாப்பிட மறுக்கின்றனர். புதுவிதமாக சிற்றுண்டி தயாரித்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். முருங்கை கீரை பரோட்டா செய்யலாமே.

செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, சிறிதாக நறுக்கிய முருங்கை கீரை, பச்சை மிளகாய், ஓமம், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசையவும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து மிருதுவாக பிசையவும். 10 நிமிடங்கள் ஊற விடவும்.

அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி பூரிக்கட்டையால் தட்டிக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் பரோட்டாவை போட்டு, நெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும். தீ மிதமாக இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சுவையான முருங்கை இலை பரோட்டா தயார். தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். கொழுப்பை குறைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

-நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us