Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ சுவையான பலாப்பழ இட்லி

சுவையான பலாப்பழ இட்லி

சுவையான பலாப்பழ இட்லி

சுவையான பலாப்பழ இட்லி

ADDED : ஜூன் 27, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
பொதுவாக பெண்கள், சமையலில் புதிது, புதிதாக உணவு வகைகளை செய்து அசத்துவது வழக்கம். இட்லியிலும் பல வகைகள் உள்ளன. ஆனால் பலாப்பழ இட்லி புதுமையானது, சுவையானது. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதை எப்படி செய்வது என, பார்ப்போமே.

தேவையான பொருட்கள்


 ஏலக்காய்- ஐந்து

 அரிசி ரவை- 1 கப்

 பலாப்பழம்- 2 கப்

 உப்பு- தேவையான அளவு

 தேங்காய்துருவல் - அரை கப்

 வாழை இலை- 4

 நெய்-அரை கப்

 வெல்லம்-1 கப்

செய்முறை


பலாப்பழத்தை நன்றாக பிசைந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெல்லம், உப்பு, ஏலக்காய் துாள், அரிசி ரவை, தேங்காய் துருவலை போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

அதன்பின் இட்லி தட்டுகளின் மீது வாழை இலை வைத்து, அதன் மீது நெய் தடவ வேண்டும். அதன் மீது ஏற்கனவே தயார்செய்து வைத்துள்ள மாவை ஊற்றி, மூடி 25 நிமிடம் வேக வைத்தால், சுவையான பலாப்பழ இட்லி தயார்.

வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தால், பலாப்பழ இட்லி செய்து கொடுத்து அசத்தலாம். குழந்தைகளுக்கு டிபன் கொடுத்தனுப்பலாம்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us