Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

ADDED : ஜூன் 20, 2025 11:24 PM


Google News
மோர்க்குழம்பு வைக்கும்போது, ஒரு வாழைப்பழத்தை நன்கு பிசைந்து குழம்பில் சேர்த்தால் ருசி அதிகமாகும்.

கிழங்கு, பருப்பு, பயறு வகைகளை வேக வைக்கும்போது, அவை வெந்த பின், உப்பு சேர்த்தால் சுவை கூடும்.

தயிருக்கு உறை ஊற்றும் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சினால் கெட்டியான தயிர் கிடைக்கும்.

பால் அல்வா செய்யும்போது சிறிது கோக்கோ பவுடர் சேர்த்து செய்தால், சுவையான சாக்லேட் பால் அல்வாவாக மாறும்.

உளுந்து வடை மாவுடன் சிறிது சாதம் சேர்த்து அரைத்தால் சுவையும் கூடும், எண்ணெயும் குறைவாக செலவாகும்.

மீதமான தேங்காய் துருவலில் சிறிது உப்பு சேர்த்து லேசாக வதக்கி வைத்தால், மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

குலோப் ஜாமூன் பாகில் ஒரு துளி தேன்விட்டால், பாகு உறையாமலும், கெட்டு போகாமலும் அதிக சுவையுடனும் இருக்கும்.

தேநீர் தயாரிக்கும்போது ஒரு துண்டு ஆரஞ்சு பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால், தேநீரின் சுவை மேலும் அதிகமாகும்.

மிக்சர் செய்யும்போது பொரித்து எடுத்த பூண்டு பற்கள், கறிவேப்பிலையை கலந்தால் ருசியும், மணமும் அதிகரிக்கும்.

மண்சட்டியில் வத்தக்குழம்பு வைக்கும்போது, சுவை மேலும் அதிகரிக்கும்.

பொரித்தெடுத்த குலோப் ஜாமூன்களை சூடான சர்க்கரை பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பிறகு சேர்த்தால் ஜாமூன்கள் விரியாமலும், கரையாமலும் சுவையாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸில் சிறிது சோம்புத்துாள் கலந்தால் ஜூஸ் வாசனையாக இருக்கும்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us