Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ தடகளத்தில் பதக்கங்கள்: கல்லுாரியில் இளைஞருக்கு இலவச அட்மிஷன்

தடகளத்தில் பதக்கங்கள்: கல்லுாரியில் இளைஞருக்கு இலவச அட்மிஷன்

தடகளத்தில் பதக்கங்கள்: கல்லுாரியில் இளைஞருக்கு இலவச அட்மிஷன்

தடகளத்தில் பதக்கங்கள்: கல்லுாரியில் இளைஞருக்கு இலவச அட்மிஷன்

ADDED : ஜூன் 06, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
ஓட்டப்பந்தயத்தில் ஹூப்பள்ளி இளைஞர், தங்கப்பதக்கங்களை குவித்துள்ளார். நடப்பாண்டு ஏப்ரலில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

ஹூப்பள்ளியின் மன்டூரா சாலையில் வசிப்பவர் சையத் சபீர், 17. இவர் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார். இவரது தந்தை ரயில்வே துறையில் டெக்னிஷியனாக பணியாற்றுகிறார். இவரது சகோதரர் இர்பானும் தடகள வீரர் தான். ஓட்டப்பந்தய வீரரான சபீர் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பல போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

தேசிய அளவில் நடந்த 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று, மூன்று தங்கம், எட்டு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளார்.

நடப்பாண்டு மார்ச்சில், பாடலிபுராவில் நடந்த 20வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன் ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் பெற்றுள்ளார்.

2024ல் புவனேஸ்வரில் நடந்த 39வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்; அதே ஆண்டு குஜராத்தில் நடந்த, 19வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்போட்டியில் 6--00 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றிருந்தார்.

ஏப்ரலில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்துகிறார்.

இது குறித்து சபீர் கூறியதாவது:

இதற்கு முன் நான் ஏழாவது, எட்டாவது வகுப்பில் படித்த போது தார்வாடில், விளையாட்டு துறை ஹாஸ்டலில் இருந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். இப்போது பெங்களூரின் கேலோ இந்தியா மையத்தில், வசந்தகுமார் என்பவரிடம் பயிற்சி பெறுகிறேன்.

'கேலோ இந்தியா' மையத்தில் இலவச உணவு, பயிற்சி கிடைக்கிறது. ஆனால் வரும் நாட்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க, ஊட்டச்சத்தான உணவு, தரமான ஷூக்கள், பயிற்சி சாதனங்கள் தேவை. கேலோ இந்தியா மையத்தில், பயிற்சி பெறுவதுடன் ஆன்லைன் வழியாக நடத்தும் பயிற்சிகளிலும் பங்கேற்கிறேன்.

பெங்களூரின், ரேவா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பி.யு.சி., முடித்துள்ளேன். என் சாதனையை அடையாளம் கண்டு, ஹூப்பள்ளியின் சனா ஷாஹின் கல்லுாரி, எனக்கு இரண்டாம் ஆண்டு பி.யு.சி., யில் இலவசமாக அட்மிஷன் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us